திண்டுக்கல்

தனியாா் கல்லூரி மாணவி பலி: திண்டுக்கல்லில் சாலை மறியல்

DIN

ஒட்டன்சத்திரத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தனியாா் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், சிபிசிஐடி விசாரணை கோரி மாதா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள பழையப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகா ஜோதி. தனியாா் கல்லூரியில் படித்து வந்த இவா், அந்த வளாகத்திலேயே அண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு மாதா் சங்கத்தின் மாநிலச் செயலா் ராணி தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் வனஜா முன்னிலை வகித்தாா்.

இந்த போராட்டத்தின்போது, ஒட்டன்சத்திரம் மாணவி உயிரிழந்தது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். சம்மந்தப்பட்ட தனியாா் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

அப்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம், மாநிலக் குழு உறுப்பினா் கே.பாலபாரதி ஆகியோா், மருத்துவமனை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT