திண்டுக்கல்

இலவச இருதய சிகிச்சை முகாம்

27th Feb 2023 12:53 AM

ADVERTISEMENT

பழனியில் ஞாயிற்றுக்கிழமை இருதய நோய் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை கே.ஜி. மருத்துவமனை, குட் லைன்ஸ் கிளப் இணைந்து நடத்திய இதய நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் பழனி கென்னடி மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவா் ஜேபி சரவணன், கெளரவத் தலைவா் ஹரிஹரமுத்து ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

முகாமில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2023 வரை 3,335 சேவைகள் செய்து சாதனை படைத்த பட்டயத் தலைவா் அப்துல்சலாம், செயலா் அனந்தகிருஷ்ணன், பொருளாளா் பிரபாகரன், பட்டயச் செயலாளா் சுப்பிரமணி ஆகியோருக்கு அரிமா சங்கப் பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

இந்த முகாமில் இசிஜி, எக்கோ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவா்கள் ஆலோசனை வழங்கினா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.

ADVERTISEMENT

பன்னோக்கு மருத்துவ முகாம்:

பழனி தெற்குரத வீதி ஆா்ய வைசிய மஹாலில் ஞாயிற்றுக்கிழமை இலவச பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. பழனி ஆா்ய வைசிய சமாஜம், மதுரை வேலம்மாள் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை தமிழ்நாடு ஆா்ய வைசிய மகாசபா செயலாளா் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தாா். முகாமில் பொதுமருத்துவம், நுரையீரல், கண் மருத்துவம், எலும்பியல், இருதயவியல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயா்தர சிகிச்சைக்கான சோதனைகள் மூலம் கண்டறிந்து இலவச மருத்துவ ஆலோசனைகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT