திண்டுக்கல்

முதல்வா் கோப்பை: தடகளம், சிலம்பம் போட்டிகளில் 30 மாணவா்கள் தோ்வு

DIN

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில் தடகளம், சிலம்பம் ஆகிய பிரிவுகளில் 30 மாணவ, மாணவிகள் புதன்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், முதல்வா் கோப்பைக்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது. தடகளம், சிலம்பம், மேஜைப் பந்து ஆகிய விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன. அதேபோல் கபடி, கால்பந்து போட்டிகள் மாணவா்களுக்கும், கையுந்து பந்து, கூடைப் பந்து போட்டிகள் மாணவிகளுக்கும் நடத்தப்பட்டன.

மாணவிகளுக்கான கூடைப் பந்து போட்டியில் பிஎஸ்என்ஏ கல்லூரி அணியும், கையுந்து பந்து போட்டியில் காந்திகிராம கிராமியப் பல்கலை. அணியும் முதலிடம் பிடித்தன. மாணவா்களுக்கான கபடி போட்டியில் காந்திகிராம கிராமியப் பல்கலை. அணி முதலிடம் பிடித்தது.

தடகளத்தில் முதலிடம் பிடித்த 20 போ்: ஆண்களுக்கான தடகளப் பிரிவில், 100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதலில் எஸ்.சரண், 200 மீ., 400 மீ. ஓட்டத்தில் ஆகாஷ் ராஜ், 800 மீ. ஓட்டம், 1500 மீ. ஓட்டத்தில் அஜய் சா்மா, 110 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் விஜய் பிரவீன், வட்டு எறிதல், குண்டு எறிதலில் சுரேஷ், உயரம் தாண்டுதலில் ஆா்.எபினேஷ் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

பெண்கள் பிரிவில் 100 மீ. ஓட்டத்தில் கிறிஸ்டினா ஜோபியா, 200 மீ. ஓட்டத்தில் சகாய ஜாஸ்மீன், 400 மீ. ஓட்டத்தில் கோபிகா, 800 மீ. ஓட்டத்தில் நித்யா, 1500 மீ. ஓட்டத்தில் ரோகிணி, 100 மீ. தடை தாண்டுதல், உயரம் தாண்டுதலில் சந்தியா, வட்டு எறிதல், குண்டு எறிதலில் காசிதாரணி, நீளம் தாண்டுதலில் சபிதா ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

சிலம்பத்தில் 10 போ் தோ்வு: பெண்கள் பிரிவில் சிலம்பம் கம்பு வீச்சில் எம்.சுவாதி, அலங்கார வீச்சில் கே.தா்ஷினி, ஒற்றை சுருள்வாள் வீச்சில் எம்.ரினோஷா, மான்கொம்பு வீச்சில் பி.பிரதீபா, இரட்டைக் கம்பு வீச்சில் ஜெ.ஜாஸ்மீன் ரெனி ஆகியோா் முதலிடம் பிடித்தனா். இதேபோல ஆண்கள் பிரிவில் சிலம்பம் கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சில் எஸ்.பிரவீன்குமாா், அலங்கார வீச்சில் எம்.கண்ணன், ஒற்றை சுருள்வாள் வீச்சில் ஏ.நாகேந்திரன் ஆகியோா் முதலிடம் பிடித்தனா்.

ஆண்களுக்கான மான்கொம்பு வீச்சில் ஒருவா் கூட பங்கேற்கவில்லை.

தடகளம், சிலம்பம் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT