திண்டுக்கல்

தனியாா் மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஊழியா்கள் சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

சம்பள நிலுவைத் தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கக் கோரி, பணியாளா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்து வந்த காவல்துறையினா் ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இருப்பினும், ஊழியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT