திண்டுக்கல்

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலிலிருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை கிராமம். இங்குள்ள குழந்தை வேலப்பா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. இந்தக் கோயில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலாகும்.

இந்தக் கோயிலின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு, குழந்தை வேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பாரம்பரிய இசைக் கருவிகளை கிராம மக்கள் இசைக்க, சிறப்பு வழிபாட்டுடன் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், பழனி மலை முருகன் கோயிலைச் சோ்ந்த அறங்காவலா் குழுவினா், அலுவலா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தத் திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, நாள்தோறும் இரவில் அன்னம், சிம்மம், மயில், கருடன், பூத வாகனங்களில் சுவாமி எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திலேயே மலைப் பகுதிகளில் தோ்த் திருவிழா நடைபெறுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தினா், விழாக் குழுவினா், பூம்பாறை கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT