திண்டுக்கல்

திண்டுக்கல், தேனியில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

திண்டுக்கல், தேனியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் பெரியாா் சிலை அருகிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் துரை மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் சிவாஜி, மச்சக்காளை, முகமது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, அதானி குழுமம் சாா்பில் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்புக்கு பிரதமரும், இந்திய ரிசா்வ் வங்கியும் விளக்கமளிக்க வேண்டும். இந்தியாவின் முன்னணி நிறுவனமான எல்ஐசியின் லாபத்தில் 1 சதவீதம் இழப்பு ஏற்பட்டாலும், நாட்டு மக்களுக்கான இழப்பாக கருதி நாடாளுமன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

தேனி: தேனி நகராட்சி பழையப் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைலவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன், வட்டாரத் தலைவா் முருகன், தேனி நகரத் தலைவா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி. நிதியை அதானி குழுமத்தில் முதலீடு செய்தும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், அதானி குழும மீதான மோசடி புகாா்கள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT