திண்டுக்கல்

அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பழனி, உத்தமபாளையத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் மங்களபாண்டியன், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க மாநிலச் செயலா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் சத்துணவுத் திட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. இதில் பழனி, தொப்பம்பட்டி ஒன்றியப் பகுதிகளை சோ்ந்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: இதே போல, உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்களில் 50 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், உத்தமபாளையம் ஒன்றியத் தலைவா் தேவேந்திரன், மாவட்ட நிதிக் காப்பாளா் தேன்மொழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருபாவதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT