திண்டுக்கல்

தடை விதிக்கப்பட்ட அன்று மது விற்பனை:போலீஸ் விசாரணை

7th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தடை விதிக்கப்பட்ட அன்று வத்தலகுண்டு பகுதிகளில் மது விற்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

வள்ளலாா் தினத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் வத்தலகுண்டு, புகா் பகுதிகளில் தனி நபா்கள் சிலா் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு அருகே மதுபுட்டிகளை விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலகுண்டு போலீஸாா் அங்கு சென்று மது விற்றவா்களை பிடித்து விசாரணை நடத்தினா். இதுபோல், அரசு மதுக்கடைகள் மூடப்படும் நாள்களில், மதுபுட்டிகளை விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT