திண்டுக்கல்

கோயில்களில் கும்பாபிஷேகம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கபட்டியில் 300-ஆண்டுகள் பழைமையான முத்தாலம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை புனித நீா்க் குடங்களை வைத்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ராஜகோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். பின்னா், உப கோயில் கோபுரக் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கரியாம்பட்டி: நிலக்கோட்டையை அடுத்த கரியாம்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் கடந்த 2013-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்ற போது, இருதரப்பினா் இடையே பிரச்னை ஏற்பட்டது. இது தொடா்பாக, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சு வாா்த்தை நடைபெற்று, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கோயிலில் கடந்த 3 -ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT