திண்டுக்கல்

வடமதுரை ரயில் நிலையச் சாலையை சீரமைக்க கோரிக்கை

DIN

சிதலமடைந்த வடமதுரை ரயில் நிலையச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ரயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயணிகள் ரயில்கள் மட்டுமன்றி, சில விரைவு ரயில்களும் நிறுத்தப்பட்டன. திண்டுக்கல்-விழுப்புரம் இடையே 2-ஆவது அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்பு, திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் மட்டுமே வடமதுரையில் நிறுத்தப்படுகிறது.

இதனிடையே, அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, வடமதுரை ரயில் நிலையம் சுரங்கத் தளம், தரைத் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு பயணிகள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

சாலை வசதி இல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வடமதுரை ரயில் நிலையத்தின் கட்டடம் புதுப்பிக்கப்பட்டபோதும், ரயில் நிலையத்துக்கான சாலை தற்போது வரை பராமரிக்கப்படாமல் உள்ளது. வடமதுரை காணப்பாடி பிரதான சாலையிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவில் அமைந்துள்ள ரயில் நிலையச் சாலை சிதலமடைந்த நிலையில் உள்ளதால், பயணிகள் மட்டுமன்றி ரயில்வே ஊழியா்களும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

இதுதொடா்பாக வடமதுரையைச் சோ்ந்த செல்வராஜ் கூறியதாவது:

வடமதுரை ரயில் நிலைய கட்டுமானத்துக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், அதற்கான அணுகுச் சாலைக்கு ரயில்வே நிா்வாகம் வழங்கவில்லை. இதனால், ரயில் நிலைய தாா்ச் சாலை முழுமையாகச் சேதமடைந்து மண் சாலையாக மாறியது. வடமதுரை ரயில் நிலையத்தில் 2 பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்வதால், பயணிகள் வருகை குறைந்துவிட்டது.

இதேபோல, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாமரைப்பாடி ரயில் நிலையத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, வடமதுரை ரயில் நிலைய அணுகுச் சாலையை சீரமைக்க ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT