திண்டுக்கல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா திருக்கல்யாணம்: இன்று தைப்பூசத் தேரோட்டம்

DIN

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஆறாம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் சனிக்கிழமை மாலை தேரடியில் நடைபெறுகிறது.

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்காக மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு முன்பாக பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, தம்பதி சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னா், மங்கலநாணுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, தம்பதி சமேதராக முத்துக்குமாரசுவாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித் தேரில் எழுந்தருளினாா். பின்னா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் சனிக்கிழமை மாலை தேரடியில் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 7-ஆம் தேதி தெப்பத் தோ் உலாவும், திருக்கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

விழாவில் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா்கள் சுப்பிரமணி, ராஜ்மோகன், மணிமாறன் , எஸ்.பி. பாஸ்கரன், சித்தநாதன் சன்ஸ் செந்தில்குமாா், கந்த விலாஸ் நவீன் விஷ்ணு, கணபதி கிராண்ட் ஹரிஹர முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT