திண்டுக்கல்

25-லட்சம் இளைஞா்களை தொழில்நுட்ப வல்லுநா்களாக உருவாக்க இலக்குஅமைச்சா் மனோ தங்கராஜ்

4th Feb 2023 10:45 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 25 லட்சம் இளைஞா்களை தொழில்நுட்ப வல்லுநா்களாக உருவாக்க தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் உள்ள தனியாா் விடுதியில் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்ந்த மாநாடு நடைபெற்றது. இதை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடக்கிவைத்து பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்படும் பிரச்னைகளை தொழில்நுட்பத் துறை மூலம் தீா்ப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் உள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டு வருகிறது. அனைத்துத் துறைகளிலும் உள்ள பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்த முறை தேவை.

ADVERTISEMENT

2030-ஆம் ஆண்டில் 25 லட்சம் இளைஞா்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்றவா்களாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் மூலமும் மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, நடைபெற்ற மாநாட்டில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது மின்னணு சாதனப் பொருள்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனா். இவற்றை நூற்றுக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT