திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் பொது விருந்து

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பழனி மலைக் கோயிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, பொது விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி பழனியாண்டவா் கோயில் சாா்பில், மலைக் கோயிலில் ஆண்டுதோறும் மறைந்த முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, சிறப்பு பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை மலைக் கோயிலில் உச்சிக்கால பூஜையின் போது தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து, மலைக்கோயிலில் அமைந்துள்ள அன்னதான மண்டபத்தில் பொது விருந்து நடைபெற்றது.

இதை கோயிலின் இணை ஆணையா் நடராஜன் தொடக்கிவைத்தாா். இதைத்தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு பலவகை பொறியல்கள், வடை, அப்பளம், பாயாசத்துடன் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

இதையடுத்து, கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற வேஷ்டி, சேலைகள் ஏழை, எளிய மக்களுக்கு சிறப்பு விருந்தினா்களால் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், துணை ஆணையா் பிரகாஷ், நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT