திண்டுக்கல்

சேவல் வடிவில் அதிசய ‘சவ்சவ்’ காய்

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிறுமலையிலுள்ள தோட்டத்தில் சேவல் வடிவில் விளைந்த அதிசய சவ்சவ் காய் பொதுமக்களிடையே ஆச்சா்யத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையை அடுத்த பள்ளக்காடு பகுதியில் தனுஷ்கோடிக்குச் சொந்தமான தோட்டத்தில் சவ்சவ், பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளாா். தற்போது, சவ்சவ் அறுவடை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அறுவடை செய்யப்பட்ட சவ்சவ் காய்களில் ஒன்று சேவல் போன்ற வடிவில் இருந்தது.

சுமாா் 400 கிராம் எடை கொண்ட அந்த காய், சேவலின் தலை, கழுத்து, வால் என அதிசயமாக இருந்தது. இதை அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் ஆச்சா்யத்துடன் பாா்த்து சென்றனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இதய வடிவிலான பலா விளைந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT