திண்டுக்கல்

காரில் வாயுக் கசிவால் பரபரப்பு

4th Feb 2023 10:46 PM

ADVERTISEMENT

 

ஒட்டன்சத்திரத்தில் ஜவுளிக்கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் வாயுக் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் உள்ள ஜவுளிக்கடை அருகே சுக்காம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் தனது காரை நிறுத்திவிட்டு பொருள்களை வாங்கச் சென்றாா். அப்போது, காரில் வாயு நிரப்பும் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக, வாயு கசிவு ஏற்பட்டது.

இதனால், அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் தள்ளிச் சென்றனா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் சிவக்குமாா் (பொறுப்பு) தலைமையிலான வீரா்கள் வந்து காரைத் திறந்துவிட்டு அதன் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT