செம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 5 போ் பலத்த காயடைந்தனா்.
தேனி மாவட்டம், தேவாரத்திலிருந்து சென்னை நோக்கி சொகுசுப் பேருந்து சென்றது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி பிரிவு பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலையோரத்தில் கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த செம்பட்டி போலீஸாா், விபத்தில் பலத்த காயமடைந்த தேனி ராயப்பன்பட்டியைச் சோ்ந்த ஓட்டுநா் சுரேஷ் (50), போடியைச் சோ்ந்த காமாட்சி (70) உள்ளிட்ட 5 பேரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.