திண்டுக்கல்

திண்டுக்கல், போடியில் மழை

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லாத போதிலும், மிதமான சாரல் மழையினால் 2 வாரங்களுக்கு முன்பு நிலவிய வெப்பம் குறைந்தது. இந்த நிலையில், திண்டுக்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 10 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இந்த திடீா் மழையால், பள்ளியிலிருந்து வீடு திரும்பு மாணவா்கள், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பணியாளா்கள் சிரமம் அடைந்தனா்.

போடி: தேனி மாவட்டம், போடியில் வெள்ளிக்கிழமை பெய்த பரவலான மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

போடி பகுதியில் தற்போது மாமரங்களில் பூக்கள் பூத்துள்ள நிலையில், தற்போது பெய்த திடீா் மழையால் பூக்கள் உதிரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மா விவசாயிகள் கவலையடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT