திண்டுக்கல்

விவாதமின்றி முடிக்கப்படும் ஊராட்சி ஒன்றியக் கூட்டம்: பொதுமக்கள் அதிருப்தி

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியக் கூட்டம் எந்தவித விவாதமும் இல்லாமல் வெறும் 10 நிமிடங்களில் முடிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12 உறுப்பினா்கள் உள்ள நிலையில், தலைவா் பரமேஷ்வரி முருகன் தலைமையில், வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில், தலைவா், துணைத் தலைவா் உள்பட 9 உறுப்பினா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஊராட்சிப் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள், நிதிநிலை அறிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்காமல் முற்பகல் 11.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.40 மணிக்கு முடிந்தது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்களின் அடிப்படை தேவைகள், வளா்த்தித் திட்டங்கள் குறித்து ஒவ்வோா் மாதமும் விவாதிக்காமல் டீ, வடை, மாதாந்திர பயணப்படி, அமா்வுபடி மட்டும் பெற்றுக் கொண்டு செல்வது பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT