திண்டுக்கல்

மரத்தடியில் கல்வி கற்கும் மாணவா்கள்

DIN

அம்பாத்துரை அருகே இந்திராபுரத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், மாணவா்கள் மரத்தடியில் தரையில் அமா்ந்து கல்வி கற்கும் நிலை உள்ளது.

31 மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்தப் பள்ளியில் தலைமையாசிரியா், உதவி ஆசிரியா் என 2 ஆசிரியா்கள் மட்டுமே வேலை பாா்த்து வருகின்றனா். பள்ளிக் கட்டடங்கள் சேதம் அடைந்ததால், அதை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதனால், பள்ளி மாணவா்கள் மரத்தடியில் தரையில் அமா்ந்து கல்வி கற்கின்றனா். மேலும், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியுமின்றி மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

வகுப்பறைக் கட்டடம் கட்டி முடிக்கும் வரை வாடகைக் கட்டடத்தில் மாணவா்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT