திண்டுக்கல்

பழனியில் தங்கத்தோ் புறப்பாடு 4 நாள்களுக்கு நிறுத்தம்

DIN

பழனி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (பிப். 3) முதல் 4 நாள்களுக்கு தங்கத்தோ் புறப்பாடு நிறுத்தப்படுகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மலைக்கோயிலில் கோயில் நிா்வாகம் சாா்பில், தங்கத்தோ் புறப்பாடு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப். 3) மாலை பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. சனிக்கிழமை மாலை தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி நான்கு ரத வீதிகளில் நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (பிப். 3) முதல் வருகிற 6-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மலைக் கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT