திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 35 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் 35 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, தொப்பம்பட்டி, ஆத்தூா், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, வேடசந்தூா், குஜிலியம்பாறை, வடமதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வட்டாரங்களில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பிப்ரவரி 2-ஆவது வாரம் முதல் பரவலாக நெல் அறுவடைப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த பருவத்தில் மாவட்டத்தில் 26 இடங்களில் கொல்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.

35 இடங்களில் கொள்முதல் நிலையங்கள்: இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் ஆத்தூா், நிலக்கோட்டை வட்டாரங்களில் பிப்ரவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். கிலோ நெல் ரூ.21.60-க்கு கொள்முதல் செய்வதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டதால், விவசாயிகளுக்கு வெளிச்சந்தைகளை விடக் கூடுதல் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதேபோல, பழனி, தொப்பம்பட்டி வட்டாரங்களில் மாா்ச் 2-ஆவது வாரத்தில் அறுவடை தொடங்கும் என்பதால், மாா்ச் முதல் வாரத்தில் அந்த வட்டாரங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

தற்போதைய நிலையில் 35 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவை இருக்கும்பட்சத்தில் கூடுதல் இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும். நடப்புப் பருவத்தில் பிள்ளையாா்நத்தம், கணவாய்ப்பட்டி, தாதப்பட்டி உள்பட 9 இடங்களில் முதல் முறையாக கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது புகாா் அளித்தால், சம்மந்தப்பட்ட பணியாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT