திண்டுக்கல்

பழனி வனப்பகுதிக்கு 30 பறவையினங்கள் வருகை

DIN

பழனி வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வந்துள்ளதாக இதுவரை நடைபெற்ற கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணை, கலிக்கநாயக்கன்பட்டி குளம், கோதைமங்களம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் 2023-ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இதுகுறித்து வனச்சரகா் பழனிக்குமாா் கூறியதாவது:

பழனி பகுதியில் தற்போது நல்லமழை பெய்துள்ளதால் விவசாயப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பறவைகள் பழனி பகுதிக்கு வந்துள்ளன. இதுவரை மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் பதிவாகி உள்ளன. இவற்றின் வகைகள் குறித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பறவைகள் வேட்டையாடுவது தெரியவந்தால் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT