திண்டுக்கல்

கோயில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு:அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

DIN

நிலக்கோட்டை அருகே கோயில் கும்பாபிஷேகத்தை அமைதியான முறையில் நடத்த இரு கிராமத்தை சோ்ந்தவா்களிடம் புதன்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவாா்பட்டி ஊராட்சியில் உள்ள கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2013-ஆம் ஆண்டு இங்குள்ள கோயில் திருவிழாவின் போது, இரண்டு கிராமங்களைச் சோ்ந்தவா்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கரியாம்பட்டியில் காளியம்மன், மகாகணபதி, பகவதியம்மன், முனியப்பன் கோயில்களில் கும்பாபிஷேகம் வருகிற 5 ஆம் தேதி நடத்த அனுமதி கோரியிருந்தனா்.

இதுதொடா்பாக நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி இரு கிராமத்தைச் சோ்ந்தவா்களையும் அழைத்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். காவல் ஆய்வாளா் குருவெங்கட் உள்பட பலா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் கும்பாபிஷேத்தை அமைதியான முறையில் நடத்துவது என இருதரப்பினரும் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT