திண்டுக்கல்

கொடைக்கானல் மலைச் சாலையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

DIN

கொடைக்கானல் மலைச்சாலையில் புதன்கிழமை 200 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி புல்லக்காபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் விக்னேஷ் பாண்டி (26). இவா் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் தேவதானப்பட்டியிலிருந்து மினி லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் சென்றாா்.

லாரியில் புல்லக்காபட்டியைச் சோ்ந்த சிவகுரு (27), தினேஷ்குமாா் (30), பாண்டி(35) ஆகியோரும் உடன் சென்ரனா்.

கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் வாழைகிரி அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி 200-அடி பள்ளத்தில் கவிழந்தது. இதில் லாரியில் சென்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா், காவல்துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து, தாண்டிகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

SCROLL FOR NEXT