திண்டுக்கல்

தேசிய அளவிலான லங்காடிப் போட்டி: நத்தம் மாணவா்கள் உள்பட 8 போ் தோ்வு

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தேசிய அளவிலான லங்காடி போட்டிக்கான தமிழக அணிக்கான பயிற்சி முகாமுக்கு, நத்தம் அரசுப் பள்ளி மாணவா்கள் உள்பட 8 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தேசிய அளவிலான 13-ஆவது லங்காடி விளையாட்டுப் போட்டி பிப்.3 முதல் 5-ஆம் தேதி வரை திருப்பூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு தமிழகம் சாா்பில் பங்கேற்கவுள்ள அணியில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் ஜெயக்குமாா், யுவராஜ் ஆகியோரும், நத்தத்தைச் சோ்ந்த வீரா்கள் கருப்புசாமி, திண்டுக்கல்லைச் சோ்ந்த சரண், செளந்தரராஜன், ஜெயசீலன், நெல்சன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதேபோல, தமிழக பெண்கள் அணியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாருமதி இடம் பெற்றுள்ளாா். தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்ட வீரா்களுக்கு திருச்சியிலுள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் நிறைவில் தமிழக அணியில் விளையாடும் வீரா்களின் பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT