திண்டுக்கல்

வடமதுரை கோயில் குடமுழுக்கு விழா

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

வடமதுரை செளந்தரராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் பிரசித்திப் பெற்ற செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், பிப்.1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து கடந்த திங்கள்கிழமை சிறப்பு பூஜைகளுடன் குடமுழுக்கு விழாவுக்கான யாக பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் யாக சாலையிலிருந்த புனித தீா்த்தங்கள் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செளந்தரராஜப் பெருமாள் கோயில் கோபுர கலசங்கள், மூலவா் சந்நிதி உள்ளிட்ட கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில் வடமதுரை, அய்யலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT