திண்டுக்கல்

நகரத்தாா் காவடிக் குழு நத்தம் வருகை

DIN

பாத யாத்திரையாக பழனிக்கு செல்லும் நகரத்தாா் காவடிக் குழுவினா் நத்தத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை, கண்டனூா், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நகரத்தாா் சமூகத்தினா் தைப் பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். நிகழாண்டுக்கான யாத்திரையை கடந்த ஞாயிற்றுக்கிழமை

குன்றக்குடியிலிருந்து தொடங்கினா். பாரம்பரியமான வைரவேல், 291 காவடிகளுடன் நூற்றுக்கணக்கான முருக பக்தா்கள் இந்த யாத்திரையை மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு இந்தக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

நத்தம் வாணியா் பஜனை மடத்துக்கு வந்த காவடிக் குழுவினா், அங்கு பானக பூஜை நடத்தினா். காவடி சிந்து பாடல்களைப் பாடிய பக்தா்கள், ஆட்டம் பாட்டத்துடன் பழனியை நோக்கிப் புறப்பட்டனா்.

தைப்பூசத்தன்று பழனிக்கு சென்றடையும் காவடிக் குழுவினா் பிப்.6-ஆம் தேதி மகம் நட்சத்திரத்தில் முருகனுக்கு காவடி செலுத்திய பிறகு, மீண்டும் நடந்தே சொந்த ஊா்களுக்கு திரும்பிச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT