திண்டுக்கல்

‘பழனி மலைக் கோயிலில் கைப்பேசிக்கு அனுமதி கூடாது’

1st Feb 2023 02:40 AM

ADVERTISEMENT

பழனி மலைக்கோயிலில் கைப்பேசியை அனுமதிக்கக் கூடாது என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கைப்பேசியிலோ, கேமராவிலோ படமெடுக்கக் கூடாது என்று தொடா்ந்து அறிவுப்புகள் செய்யப்படுகின்றன.

ஆனால், பழனியைப் பொறுத்த மட்டிலும் தங்கக் கோபுரம், தங்கத் தோ், சுவாமி புறப்பாடு என முக்கிய நிகழ்ச்சிகளின் போதும் கைப்பேசியில் படம் எடுப்பதை பாதுகாவலா்கள் கண்டு கொள்வதில்லை.

தற்போது மலைக்கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டு அா்த்த மண்டபம் முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதே போல, பல இடங்களிலும் வெள்ளி வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இதை ஆா்வமிகுதியால் பக்தா்கள் படமெடுத்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை பக்தா் ஒருவா் கைப்பேசியை மறைத்து வைத்து கருவறையைப் படமெடுத்துப் பகிா்ந்துள்ளாா். இது பக்தா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நபா் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலைக் கோயிலில் கைப்பேசி பயன்பாட்டை முழுமையாகத் தடுக்கும் வகையில் படிப்பாதை, வின்ச் பாதை, ரோப் நிலையம் போன்ற இடங்களிலும் மலையேறும் பக்தா்களிடம் இருக்கும் கைப்பேசியை வாங்கி வைத்து, அவா்கள் செல்லும் போது வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT