திண்டுக்கல்

நத்தம் பகுதியில் நாளை மின் தடை

26th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், அய்யாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 27) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நத்தம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் வெங்கடேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் நத்தம், அய்யாபட்டி, கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பண்ணியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT