திண்டுக்கல்

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

26th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வ தனபாக்கியம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பத்மாவதி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்டச் செயலா் கே. பிரபாகரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். முபாரக் அலி ஆகியோா் கலந்து கொண்டாா்.

போராட்டத்தின்போது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கைப்பேசி அல்லது பதிவேடு என்பதில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்த அங்கன்வாடி உதவியாளா்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசு ஊழியா்களைப் போன்று அங்கன்வாடி ஊழியா்களுக்கும் பிரசவ கால விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் பின்னா், ஆட்சியா் அலுவலக வாளகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT