திண்டுக்கல்

செல்வ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

25th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

நத்தம் அடுத்துள்ள சேத்தூா் செல்வமுத்துமாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 16-ஆம் தேதி கரந்தமலை தீா்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தா்கள் சாா்பில் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பூக்குழி இறங்குதல் போன்ற நோ்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பாரிவேட்டை மற்றும் மஞ்சள் நீராடுதல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை சேத்தூா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT