திண்டுக்கல்

பழனியில் ரோப்காா் சேவை இன்றும், நாளையும் நிறுத்தம்

DIN

பழனி மலைக் கோயிலில், பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை செவ்வாய், புதன்கிழமைகளில் (ஏப். 25, 26) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, இழுவை ரயிலுக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டே நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ரோப்காா் சேவை பக்தா்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் தினமும் பிற்பகலில் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக செவ்வாய், புதன்கிழமை ரோப்காா் நிறுத்தப்படுகிறது என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.

வழக்கமாக மாதத்தில் ஒரு நாள் ரோப்காா் சேவை நிறுத்தப்படும். இந்த முறை பராமரிப்புப் பணிகள் அதிகம் இருப்பதால், இரண்டு நாள்கள் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT