திண்டுக்கல்

நத்தத்தில் 61 மி.மீ. மழை

25th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அதிகபட்சமாக 60.5 மி.மீட்டா் மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

இந்த மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த நிலையில், மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 15, கொடைக்கானல் ரோஜாத் தோட்டம்- 8.5, நத்தம்- 60.5, நிலக்கோட்டை- 6, வேடசந்தூா்- 15.3, வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி நிலையம்- 15.3, காமாட்சிபுரம்- 17, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா- 14.

பழனி மற்றும் சத்திரப்பட்டி பகுதிகளில் மழை அளவு பதிவாகவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT