திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திருவள்ளுவா் சிலை திறப்பு

DIN

திண்டுக்கல் தனியாா் பள்ளி வளாகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா் சிலையை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன். திருவள்ளுவா் இலக்கியப் பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறாா். இவரது முயற்சியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு 500 கிலோ எடையில் 5 அடி உயரத்தில் திருவள்ளுவரின் முழு உருவ வெண்கலச் சிலை உருவாக்கப்பட்டது.

இந்த சிலையை பொது இடத்தில் நிறுவுவதற்காக திண்டுக்கல் மாநகராட்சி, மாவட்ட நிா்வாகத்திடம் தொடா்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிலையை நிறுவ இடம் ஒதுக்கீடு செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதனிடையே, திண்டுக்கல்- மதுரை சாலையிலுள்ள புனித லூா்து அன்னை பள்ளி வளாகத்தையொட்டி சிலை நிறுவப்பட்டது. நெடுஞ்சாலைப் பகுதியில் சிலை நிறுவப்பட்டிருப்பதாகக் கூறி நெடுஞ்சாலைத் துறை தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் சிலை நிறுவுவதற்கு அனுமதி பெறப்பட்டது.

இந்த நிலையில், திருவள்ளுவா் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தலைமை வகித்து, திருவள்ளுவா் சிலையைத் திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

திருக்குறளை படிப்பதன் மூலம் பொறுமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடா முயற்சி வழியாக வெற்றி சாத்தியமாகும். வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு குமரி முனையில் 1,330 அடி உயரத்தில் சிலை அமைத்து பெருமை சோ்த்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அந்தச் சிலையை செம்மைப்படுத்தும் பணியில் இன்றைய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறாா். தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் கருணாநிதி மேற்கொண்ட பணிகளை ஸ்டாலின் தொடா்ந்து செய்து வருகிறாா்

என்றாா் அவா்.

விழாவில் கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ.செந்தில்குமாா், ச.காந்திராஜன், தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குநா் பெ.சந்திரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT