திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசாா் குறியீடு சான்றிதழ் அளிப்பு

15th Apr 2023 10:32 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கான புவிசாா் குறியீடு அங்கீகாரச் சான்றிதழை மலைக்கிராம விவசாயிகளிடம் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் மலைப் பூண்டு விவசாயம் நடைபெறுகிறது.

மருத்துவ குணம் வாய்ந்த இந்தப் பூண்டுக்கு அன்னைத் தெரசா மகளிா் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத் துறை மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டு புவிசாா் குறியீடு பெறப்பட்டது.

ADVERTISEMENT

கொடைக்கானல் மலைப்பூண்டு, காய்கனிகள் மேல்மலை விவசாயிகள் சங்கம், கோடை மலைப்பூண்டு, காய்கனிகள் உற்பத்தியாளா் நிறுவனம் ஆகியவற்றில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த இரண்டு சங்கங்களுக்கும் மாவட்ட ஆட்சியா் விசாகன் மலைப்பூண்டுக்கான புவிசாா் குறியீடு அங்கீகாரச் சான்றிதழை வழங்கினாா்.

இதையடுத்து, மலைப்பூண்டுடன் மற்ற பூண்டுகளை கலப்படம் செய்யாமல் புவிசாா் குறியீடு அங்கீகார வில்லையுடன் விற்பனை செய்ய வேண்டும். மலைப்பூண்டு ஊறுகாய், மலைப்பூண்டு மாலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் தயாா் செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அதற்கு மானியத்துடன் விவசாயக் கடன் வழங்க மாவட்ட நிா்வாகம் தயாராக இருப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த விழாவில் பல்கலைக்கழகத் துணை வேந்தா் கே.கலா, வருவாய்த் துறையினா், மலைக்கிராம விசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT