திண்டுக்கல்

சிறுபான்மையினருக்கு என்றும் திமுக துணை நிற்கும்அமைச்சா்

15th Apr 2023 10:31 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் (இப்தாா்) நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அமைச்சா் அர.சக்கரபாணி தலைமை வகித்து, நோன்பு திறந்து வைத்துப் பேசியதாவது:

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு என்றும் திமுக துணை நிற்கும்.

ADVERTISEMENT

பள்ளி வாசலுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை வசதி உடனடியாக செய்து தரப்படும் என்றாா்.

நோன்பின் மாண்பு குறித்து எம்.ஹஸன்ஷரீப் பைஜி, ஒட்டன்சத்திரம் சி.எஸ்.ஜ. மீட்பா் ஆலய கெளரவக் குரு பா.பால்பாண்டியன், வாவிபாளையம் இறையருள் மன்றத் தலைவா் வெ.அனந்த கிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஒட்டன்சத்திரம் நகர திமுக செயலாளா் ப.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகா் மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, நத்தம் பேரூராட்சித் தலைவா் ஷேக் சிக்கந்தா் பாட்சா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதீனா மஸ்ஜித் மதரஸா செயலாளா் மு.ஹைதா் அலி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT