திண்டுக்கல்

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (செப். 30, அக். 1)மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த சாமிநாதபுரம், சத்திரப்பட்டி, தொப்பம்பட்டி துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் புஷ்பத்தூா், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, பெரியகோட்டை, மரிச்சிலம்பு ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

அதே போல வாகரை, பழனி, தாளையூத்து துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அப்பனூத்து, அப்பிபாளையம், புங்கமுத்தூா், மேட்டுப்பட்டி, அய்யம்புள்ளி, ராமநாதநகா், பாலசமுத்திரம், ஆயக்குடி, பொருந்தல், கணக்கன்பட்டி, அமரபூண்டி, மிடாப்பாடி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT