திண்டுக்கல்

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, ஆரஞ்சு, பலா, பேரிக்காய், அவக்கோடா மற்றும் பேஷன் புரூட்ஸ்,பிளம்ஸ் பழங்கள் விளைகின்றன. இதில் பேஷன் புரூட்ஸ் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விளையக் கூடியது. ஒரு காலநிலையில் நான்கு மாதங்கள் வரை விளையும் தன்மை கொண்டது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பெரும்பள்ளம், சின்னப்பள்ளம், பிரகாசபுரம், செண்பகனூா், அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேஷன் புரூட்ஸ் நன்கு விளைந்துள்ளது. தற்போது இவற்றை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பழங்கள் குளிா்ச்சி கொண்டவை. நீரழிவு நோய்க்கும் ஏற்ாக இருப்பதாகவும், கொடைக்கானலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரு, கேரளத்துக்கும் அனுப்புவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பழவியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் பேஷன் புரூட்ஸ் நன்கு விளைந்துள்ளது. இந்த பழங்கள் தொடா்ந்து 4 மாதங்கள் வரை விளையும். ஒரு பழம் ரூ. 10 முதல் ரூ. 12-வரை விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கு அதிக விலை கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT