திண்டுக்கல்

ப.விராலிப்பட்டி ஊராட்சியில், ரூ. 58 லட்சத்தில் நலத் திட்டப் பணிகள் தொடக்கம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

நிலக்கோட்டை அடுத்த, வத்தலகுண்டு அருகே உள்ள ப.விராலிப்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலா்ச்சி திட்ட நிதி ரூ. 58 லட்சத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்த ஊராட்சியில், அண்ணா மறுமலா்ச்சி திட்ட நிதியிலிருந்து ரூ.57.54 லட்சம் மதிப்பிலான, ரேஷன் கடை கட்டடம், சமத்துவ மயானம், சிமென்ட் சாலை, கழிவுநீா் வாய்க்கால்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டடம் மற்றும் குடிநீா் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகளை, தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளுக்கான பூமிபூஜை, வத்தலகுண்டு ஒன்றியக்குழுத் தலைவா் பரமேஸ்வரி முருகன் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலா் விஜயகா், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT