திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 910 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் 107 இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 910 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் நடத்தப்பட்டது. மாவட்டத்திலுள்ள 5 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 102 கால்நடை மருந்தகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

நத்தம் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் கால்நடை மருத்துவா் சிங்கமுத்து தலைமையில் வேலம்பட்டியில் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு, குடற்புழு நீக்கம், தோல் வியாதிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் உதவியாளா் செந்தில்குமாா், ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக மண்டல இணை இயக்குநா் முருகன் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 107 இடங்களில் நடைபெற்ற வெறிநோய் தடுப்பூசி முகாமில், 910-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT