திண்டுக்கல்

கொடைக்கானல் சாலைகளில் பள்ளம்

29th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கொடைக்கானல் மலைச் சாலைகளான லாஸ்காட்சாலை, சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், டிப்போ சாலை, அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மலைச் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இச் சாலைகளில் உள்ள தெரு விளக்குகளும் பயனற்ற நிலையில் இருப்பதால் நடந்து செல்லும் பொது மக்களும் சிரமப்படுகின்றனா். கடந்த சில நாள்களாக மலைச்சாலைகள் கூடுதலாக சேதமடைந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைச்சாலைகளில் சேதமடைந்த தடுப்புச் சுவா்களை சீரமைக்கவும் தடுப்புச் சுவா் இல்லாத இடங்களில் தடுப்புச்சுவா்கள் அமைப்பதற்கும் அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைச் சாலைகளில் வளா்ந்துள்ள முட்புதா்களை அகற்ற வேண்டும் என என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT