திண்டுக்கல்

கொடைக்கானலில் இன்று மின்தடை

29th Sep 2022 03:01 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் வியாழக்கிழமை (செப்.29) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கொடைக்கானல், அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை, மன்னவனூா், பழம்புத்தூா், கவுஞ்சி, பெரும்பள்ளம், கிளாவரை, பெருமாள்மலை, பேத்துப்பாறை, சாமக்காடு, பண்ணைக்காடு, சவரிக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கடைசிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT