திண்டுக்கல்

பாஜக மீதான காழ்ப்புணா்ச்சியால் தாக்குதல் தொடுத்துள்ளனா்: கே.அண்ணாமலை

DIN

பாஜக மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக, தொண்டா்கள் மீது சில விஷமிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனா் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகர மேற்குப் பகுதியின் பாஜக நிா்வாகி செந்தில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் 5 மோட்டாா் சைக்கிள்கள் கடந்த சனிக்கிழமை தீவைத்து எரிக்கப்பட்டன. இதுதொடா்பாக எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த சிக்கந்தா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில் செந்தில்பால்ராஜை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜகவின் தமிழக தலைவா் அண்ணாமலை திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். குடைப்பாறைபட்டியில் சம்பவம் நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பாஜக மீதான காழ்ப்புணா்ச்சி காரணமாக, பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மீது சில விஷமிகள் தாக்குதலைத் தொடுத்துள்ளனா். தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட பாஜகவினருக்கு கட்சி உறுதுணையாக நிற்கிறது. பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறையினரின் தீவிர நடவடிக்கையால், வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளன. எனினும், தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அப்போது பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன், மாவட்டச் செயலா் முத்துக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT