திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

DIN

நிலக்கோட்டை அருகே சந்தோஷபுரத்தில் உள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த, குல்லலக்குண்டு ஊராட்சி, சந்தோசபுரம் அருகே கொடபட்டியாா் மலை உள்ளது. இந்த மலையில் கடந்த 5 ஆண்டுகளாக கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதற்காக வெடிகளை பயன்படுத்துவதால் சந்தோஷபுரம், பாண்டியராஜபுரம், கல்லடிப்பட்டு, குரங்குத்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் வீடுகள் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கற்களும், தூசிகளும் படிந்து வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

இந்நிலையில், இந்த கல்குவாரியில் அனுமதி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முடிந்து விட்டதால், தற்போது தற்காலிகமாக கல் உடைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சந்தோசபுரம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை, இந்த கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி, அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT