திண்டுக்கல்

கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள், ரூ.54 ஆயிரம் திருட்டு

DIN

வேடசந்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.54 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள தம்மனம்பட்டியைச் சோ்ந்தவா் வடிவேல். இவா், வேடசந்தூா் பகுதியிலுள்ள தனியாா் ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா். வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினா் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பிய வடிவேல், வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.54ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் வடிவேல் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT