திண்டுக்கல்

ஆட்டோ செயலி தொடங்கக் கோரி திண்டுக்கல்லில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

DIN

தொழிலாளா் நல வாரியம் மூலம் ஆட்டோ செயலியை தொடங்கி தமிழக அரசே நடத்த முன் வர வேண்டும் என வலியறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம்(சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் என்.பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சிஐடியு மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், தலைவா் கே.ஆா்.கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது,

தமிழகத்தில் ஆட்டோவிற்கான இணையவழிச் சேவையை(ஆட்டோ செயலி) நலவாரியத்தின் மூலம் தொடங்கி தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்ற உயா்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். 2022 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மோட்டாா் வாகனச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT