திண்டுக்கல்

தமிழ் வளா்ச்சித்துறை நடத்திய போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கல்

DIN

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடத்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் திங்கள்கிழமை பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், தமிழ்நாடு நாள், முத்தமிழறிஞா் கருணாநிதி பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், பெரியாா் பிறந்தநாள் ஆகிய தினங்களை யொட்டி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வெவ்வேறு நாள்களில் நடத்தப்பட்டன.

‘தமிழ்நாடு நாள்’ தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், திண்டுக்கல் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி அ. கௌசல்யா, பழனி சிறுமலா் உயா்நிலைப்பள்ளி மாணவி ஜோ. அகல்யா, திண்டுக்கல் புனித வளனாா் மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி பா. சையது அலிபாத்திமா ஆகியோா் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

பேச்சுப்போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவா் இரா. கிஷோா், பழனி சிறுமலா் உயா்நிலைப்பள்ளி மாணவி வி. ஹரிணி, வடமதுரை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி க. லோகேஸ்வரி ஆகியோா் முதல் 3 இடங்களில் வெற்றிப் பெற்றனா்.

முதலிடத்திற்கு ரூ. 10ஆயிரம், 2ஆம் இடத்திற்கு ரூ. 7ஆயிரம், 3ஆம் இடத்திற்கு ரூ. 5ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வழங்கினாா். அதேபோல் கருணாநிதி பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும்

பெரியாா் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச. தினேஷ்குமாா், திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் (பொ) பெ. இளங்கோ ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT