திண்டுக்கல்

இரண்டாம் சீசனுக்கு தயாராகி வருகிறது கொடைக்கானல் தாவரவியல் பூங்கா

26th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொடைக்கானல் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்ச் செடிகளால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூங்காவில் பைன் சிட்டி, போ்ட் ஆப் பாரடைஸ், பேன்சி, ரோஜா, டைந்தேஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டாம் கால சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக உள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டொராண்டா, ஹையா்ஸ் ஆகிய மலா்ச் செடிகளால் ‘ஹாா்ட்’ (இதயம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல புற்களால் மயில் உருவத் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையையொட்டி அங்குவந்த சுற்றுலாப் பயணிகள் இவற்றைப் பாா்த்து ரசித்தனா்.

மேலும் தாவரவியல் பூங்காவில் புற்கள் அழகுப்படுத்துதல், மலா்பாத்திகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT