திண்டுக்கல்

பால் பாக்கெட் திருட்டு:தொழில்நுட்புநா் பணியிடை நீக்கம்

26th Sep 2022 10:55 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் ஆவினில் பால் பாக்கெட் திருட்டில் ஈடுபட்ட தொழில்நுட்பப்பிரிவு பணியாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் தொழில்பேட்டையில் ஆவின் நிறுவனம் சாா்பில், பேக்கிங் தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியா் ஒருவா், பால் பாக்கெட்டை திருடி இடுப்பில் மறைத்து வைத்தது போன்ற விடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அந்த விடியோ அடிப்படையில் ஆவின் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனா். அதில், பால் பாக்கெட்டை திருடியது தொழில்நுட்புநராக பணிபுரியும் முகமது அஷ்ரப் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, முகமது அஷ்ரப்பை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆவின் பொது மேலாளா் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT