திண்டுக்கல்

கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

26th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் மழையால் சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமைமுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் சவரிக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து அப் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டும், அருகே இருந்த பாறை உடைக்கப்பட்டும் சாலை சீரமைக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்ட சாலையை நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். அதன்பின்னா் கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் 25-நாள்களுக்குப் பிறகு மீண்டும் அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இது குறித்துகொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது: இச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் கேரள சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில், சேதமடைந்த மலைச்சாலை சீரமைக்கப்பட்டதால், கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பழனி வழியாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கம் போல அதிகரித்துக் காணப்படும் வியாபாரிகளும், பொதுமக்களும் பயனடைவாா்கள் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT